NEWS NEWS Author
Title: கேப்டன் மில்லர் ஷூட்டிங் முடிந்ததா… திடீரென மொட்டையடித்து கெட்டப் மாற்றிய தனுஷ்!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இ...

 



இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு சில மாதங்களாக படமாக்கி வருகிறது.



இந்த படத்துக்காக தனுஷ், நீண்ட தலைமுடியும், அடர்த்தியான தாடியும் கடந்த சில  மாதங்களாக வளர்த்து வந்தார். இந்நிலையில் இப்போது திருப்பதி சென்றுள்ள அவர் மொட்டையடித்துள்ளார். இதனா கேப்டன் மில்லர் படத்தில் அவருக்கான  காட்சிகள் முடிந்துவிட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.


மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

About Author

Advertisement

Post a Comment

 
Top