NEWS NEWS Author
Title: எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி''- நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி உரை
Author: NEWS
Rating 5 of 5 Des:
  நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூரில் விவகாரத்தில்  மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்  நம்பிக்கையில்...

 

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூரில் விவகாரத்தில்  மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.



இதன் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கிய  நிலையில், இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி  உரையாற்றினார்.


அதில்,  எங்கள் மீது நம்பிக்கை வைத்த  மக்களுக்கு  நன்றி! நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு எதிரானது அல்ல. எதிர்க்கட்சிகளுக்கானது என்று கூறினார்.  


மேலும் எதிர்க்கட்சிகள் நோ பால் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்,  நாங்கள் சதம் மற்றும் சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை நோபால் போட்டால்  பரவாயில்லை. ஆனால்  எதிர்க்கட்சிகள் ஏன் திரும்ப திரும்ப நோபால் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்.


About Author

Advertisement

Post a Comment

 
Top