NEWS NEWS Author
Title: தமிழகத்தில் காங்கிரஸ் கதை முடிந்துவிட்டது.. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  தமிழ்நாட்டில் 1962 ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் கதை தமிழகத்தில் முடிந்து விட்டது என்றும் ந...

 

தமிழ்நாட்டில் 1962 ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் கதை தமிழகத்தில் முடிந்து விட்டது என்றும் நம்பிக்கை இல்லாத  தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். 


 

இந்தியா என்றால் வட இந்தியா மட்டுமே என்று தமிழக அமைச்சர் ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டிய அவர் என் காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் கூறப்போகிறது என்று தெரிவித்தார். 

 

தமிழ்நாட்டில் பாரத மாதாவுக்கு வழிபாடு நடத்துவது தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் ராஜாஜி காமராஜர் எம்ஜிஆர் அப்துல் கலாம் பிறந்த மண்ணில் பிரிவினை பேசப்படுகிறது என்றும் தெரிவித்தார். 

 

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தி தான். ஆனால் கட்ச தீவை மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் எனக்கு கடிதம் எழுதுகிறார் என்றும் அவர் பேசினார்.

 

About Author

Advertisement

Post a Comment

 
Top