NEWS NEWS Author
Title: ராமர் எப்போதும் எனக்கு உத்வேகமான நபராக இருப்பார்: ஜெய்ஸ்ரீராம் என பேச்சை துவக்கிய இங்கிலாந்து பிரதமர்..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
இந்தியாவைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த கிறிஸ்துவ நாடான இங்கிலாந்து நாட்டில் தற்போது ஒரு இந்தியர் பிரதமராக இருக்கும் நிலையில் ராமர் எனக்கு எப்போ...


rishi sunak
இந்தியாவைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த கிறிஸ்துவ நாடான இங்கிலாந்து நாட்டில் தற்போது ஒரு இந்தியர் பிரதமராக இருக்கும் நிலையில் ராமர் எனக்கு எப்போதும் ஒரு உத்வேகமாக இருப்பார் என்றும் ஜெய்ஸ்ரீராம் என்றும் கூறி பேச்சை தொடங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய சுதந்திர தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார்.  என் மேஜையில் தங்க விநாயகர் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் என்னை பொருத்தவரை  பிரதமராக இருப்பது மிகப்பெரிய கௌரவம் என்றாலும் அது எளிதான வேலை இல்லை என்றும் கடினமான முடிவுகளை எடுக்கவும் என்னுடைய இந்து நம்பிக்கை தான் எனக்கு தைரியத்தையும் உறுதியையும் தருகிறது என்று கூறினார். 
 
வாழ்க்கையில் உள்ள சவால்களை தைரியத்துடன் எதிர் கொள்ளவும், பணிவோடு ஆட்சி செய்யவும் ராமர் எனக்கு எப்போதும் உத்வேகமாக இருப்பார் என்று கூறிய ரிஷி சுனக், தனது பேச்சை தொடங்கும் போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறி பேச்சை தொடங்கினார். 
recommended by


 
ராமர் குறித்து இந்தியாவில் உள்ள ஒரு சிலரே மோசமாக பேசி வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் பெருமையாக பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

About Author

Advertisement

Post a Comment

 
Top