NEWS NEWS Author
Title: ஸ்டார் குறியீடு உள்ள 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? – ரிசர்வ் வங்கி விளக்கம்!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  சமீபமாக ரூ.500 நோட்டுகளில் இடம்பெற்றுள்ள ஸ்டார் குறியீடு குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இந்தி...

 

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
சமீபமாக ரூ.500 நோட்டுகளில் இடம்பெற்றுள்ள ஸ்டார் குறியீடு குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் காலாவதியான நிலையில் புதிய ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. தற்போது வரை புழக்கத்தில் உள்ள இந்த 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்கள் இடம் பெறுவது வழக்கம்.

ஆனால் சமீப காலமாக புழக்கத்தில் இருந்து வரும் 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்களுக்கு நடுவே ஸ்டார் குறியீடு உள்ளது. இந்த குறியீடு உள்ள ரூபாய் தாள்கள் போலியானவை என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவதால் பலரும் இந்த ரூபாய் தாள்களை வாங்க தயங்குவதால் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய ரிசர்வ் வங்கி ஸ்டார் குறியீடு உடைய ரூபாய் தாள்கள் போலியானவை கிடையாது என்றும், அவை ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டவை என்றும், அவற்றை பயன்படுத்தலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

About Author

Advertisement

Post a Comment

 
Top