NEWS NEWS Author
Title: மே.இ.தீவுகள் அணியை காப்பாற்றிய மழை.. 2வது டெஸ்ட் டிரா..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடையும் ...

 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடையும் நிலையில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை மழை காப்பாற்றியது.  
இந்த போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 181 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 255 ரன்கள் அடித்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 365 ரன்கள் என இலக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெறவே இல்லை. முற்றிலும் மழை பெய்து மைதானம் சேதம் அடைந்ததை அடுத்து நடுவர்கள் மைதானத்தை சோதனையிட்டு போட்டி டிராவில் முடிவதாக அறிவித்தனர்  

 
இதனை அடுத்து  இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையாலான ஒருநாள் போட்டி வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

About Author

Advertisement

Post a Comment

 
Top