NEWS NEWS Author
Title: மலை உச்சிக்கு சென்ற காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  துருக்கி நாட்டில் காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியைக் கொண்டாட மலை உச்சிக்கு சென்ற ஜோடிக்கு விபரீதம் நேர்ந்துள்ளது. துருக்கி நாட்டில் வடமேற்...

 



துருக்கி நாட்டில் காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியைக் கொண்டாட மலை உச்சிக்கு சென்ற ஜோடிக்கு விபரீதம் நேர்ந்துள்ளது.



துருக்கி நாட்டில் வடமேற்கில் உள்ள போலண்ட் கேப் பகுதியைச் சேர்ந்தவர் நிஜாமதீன் குர்சு. இவர் எசிம் டெமிர்( வயது39) என்பவரிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.


இதையடுத்து, இவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைக் கொண்டாடுவதற்காக சமீபத்தில் இருவரும்  அங்குள்ள மலை உச்சிக்கு காரில் புறப்பட்டனர்.


அங்கு மதுபானம் பருகி உணவு சாப்பிட்டனர்.  அதன்பின்னர், சுற்றுலாவுக்குச் செல்ல முடிவெடுத்து குர்சு தன் காருக்கு திரும்பினார்.



இன்னும் தன் காதலி வராததால், மலைப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அவரது வருங்கால மனைவி 100 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்க போராடிய போதிலும் டெமிர் உயிரிழந்துவிட்டார்.


மதுபானம் குடித்ததால் சமநிலை தவறி அவர் உயிரிழந்ததாக குர்சி கூறியுள்ளார்.


இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


About Author

Advertisement

Post a Comment

 
Top