NEWS NEWS Author
Title: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
Author: NEWS
Rating 5 of 5 Des:
  மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் கு...

 

Amitshah
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர் கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இதனை பிரதமர் ஏற்காததை அடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றனர் என்பதும் இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்த எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்க தான் தயாராக இருப்பதாகவும் எனவே அவையை சமூகமாக நடத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

About Author

Advertisement

Post a Comment

 
Top