NEWS NEWS Author
Title: திமுக எம்.எல்.ஏ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு.. நூலிழையில் உயிர் தப்பிய எம்.எல்.ஏ..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் வெடிகுண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த விழாவில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம்...

 

திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் வெடிகுண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த விழாவில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


 

கடலூர் அருகே நல்லாத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏ ஐயப்பன் வந்திருந்தார்

 

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை தூக்கி வீசி எறிந்து விட்டு மாயமாகினர். திமுக எம்எல்ஏ ஐயப்பன் அருகிலேயே அந்த பெட்ரோல் குண்டு விழுந்ததை அடுத்து நூலிழையில் அவர் உயிர்தப்பினார். 


இந்த நிலையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியது யார்? எம்எல்ஏவை குறித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


About Author

Advertisement

Post a Comment

 
Top