NEWS NEWS Author
Title: ஜோடியாக வரும் கல்லூரி மாணவர்கள் விரட்டப்படுவார்கள்: பேருந்து நிலையத்தில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  ஜோடியாக வரும் கல்லூரி மாணவ மாணவிகள் விரட்டப்படுவார்கள் என பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்ததால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற...

 

ஜோடியாக வரும் கல்லூரி மாணவ மாணவிகள் விரட்டப்படுவார்கள் என பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்ததால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

கேரளாவில் உள்ள மலப்புரம் என்ற பகுதியில் எடவண்ணா பேருந்து நிலையம் உள்ளது. இங்கே கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வார்கள். 

 

இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் நேற்று திடீரென ஒரு சர்ச்சைக்குரிய போஸ்டர் வைக்கப்பட்டது. அந்த போஸ்டரில் பேருந்து நிலையத்திற்கு மாலை ஐந்து மணிக்கு மேல் ஜோடியாக வரும் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் உள்ளூர் வாசிகளால் அடித்து விரட்டப்படுவார்கள் என மிரட்டல் எடுக்கும் வகையில் அந்த போஸ்டர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனை அடுத்து அதற்கு பதிலடியாக பொது இடத்தில் இது போன்ற உத்தரவு பிறப்பிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மற்றொரு போஸ்டர் அதன் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

About Author

Advertisement

Post a Comment

 
Top