NEWS NEWS Author
Title: ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வரும் நிலையில் ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதன...

 


அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வரும் நிலையில் ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை செய்யாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 



 

கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பொன்முடி வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது என்றும் அமலாக்க துறையை அதிகாரிகளின் சோதனைக்கு முகாந்திரம் இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


அமாவாசைக்கும் அப்துல் காதர்க்கும் என்ன சம்பந்தம் என்பது போல எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அமலாக்கத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


About Author

Advertisement

Post a Comment

 
Top