
மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வன்முறைக்கு எதிராக வரும் ஜூலை 24 ஆம் தேதி காலை, நாடாளுமன்ற வளாகத்தில், மத்திய அரசைக் கண்டித்து, I.N.D.I.A கூட்டணி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இதற்கு கருத்துகள் கூறி வருகின்றனர்.
Post a Comment