NEWS NEWS Author
Title: பரோட்டா சாப்பிட்ட 38 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
 நாமக்கல் அருகே உள்ள ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டால் 38 பேர் உடல் நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுகாதாரத்துற...



 நாமக்கல் அருகே உள்ள ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டால் 38 பேர் உடல் நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


 

நாமக்கல் அருகே சேந்தமங்கலம் என்ற பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

 

இதனை அடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த ஓட்டலில் ஆய்வு செய்த நிலையில் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்த நாமக்கல் ஆட்சியர் மக்கள் நல்வாழ்வு துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சிகிச்சை அளித்ததாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Advertisement

Post a Comment

 
Top