NEWS NEWS Author
Title: 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

 

இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது என்பது குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி இருந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,கடலூர்,அரியலூர்,பெரம்பலூர்,நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்னும் சில நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு என கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 

About Author

Advertisement

Post a Comment

 
Top