NEWS NEWS Author
Title: கடலூர் மாவட்டத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல்.. 1000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
Author: NEWS
Rating 5 of 5 Des:
  கடலூர் மாவட்டத்தில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் மருத்துவமனையில் குவிந்துள்ளதாகவும் இதனால் மருத்த...

 

கடலூர் மாவட்டத்தில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் மருத்துவமனையில் குவிந்துள்ளதாகவும் இதனால் மருத்துவமனையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


 

திடீர் என ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் குவிந்து வருகிறது 

 

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் இன்று காலை மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்துள்ளதால் மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது


 

இதனையடுத்து கடலூரில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

About Author

Advertisement

Post a Comment

 
Top