1908 இல் மெலிட்டா பென்ட்ஸ் காபி ஃபில்டர் வடிகட்டியை கண்டுபிடித்தார். இந்த பானத்திற்கான தேவை ஐரோப்பாவில் அதிகரித்து வந்தது.
தினமும் காலையில் எழுந்ததும் காபி பருகும் பழக்கம் ஜெர்மனியை சேர்ந்த மெலிட்டா பென்ட்ஸ் (1873- 1950) என்ற பெண்மணிக்கு இருந்தது. ஆனால் காபியை சுவைத்து முடித்த பிறகு அவர் புத்துணர்ச்சியாக உணர்வதற்கு பதிலாக அசௌகரியத்தை அனுபவித்தார்.
காபியின் கசப்பு சுவையும். அவரின் வாயில் ஒட்டியிருந்த காபித் தூளின் கசடும் அவரை அவ்வாறு வெறுப்பாக உணர வைத்தது. அப்போது குடும்ப தலைவியாக இருந்த மெலிட்டா, காபி பருகுவதில் தமக்கு எழுந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதன் முதல்கட்டமாக, சொந்த ஊரான டெரிஸ்டனில் இருந்த தமது வீட்டு சமையலறையில் ஒரு பானத்தை அவர் தயாரித்தார். அது பருகுவதற்கு மிகவும் சுவையாக இருந்ததால் ஜெர்மனியை தாண்டி, ஐரோப்பா முழுவதும் அந்த பானம் மெல்ல மெல்ல பிரபலமடைந்தது.
Post a Comment