NEWS NEWS Author
Title: கவர்னருக்கு ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் உள்ளது: எச் ராஜா ட்வீட்..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  தமிழக ஆளுநர் ரவி நேற்று இரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள...

 


தமிழக ஆளுநர் ரவி நேற்று இரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் ஒரு அமைச்சரை நீக்குவதற்கும் நியமனம் செய்வதற்கும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.


 

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் ஒரு அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு அதிகாரம் ஒன்று என பாஜக பிரமுகர் எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:


 

கவர்னருக்கு ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் 5 மெம்பர் பென்ச் கூறியுள்ளது. அரசியல் சட்ட ஞானம் இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். 


 

ஆளுநர் தனி அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய முடியும் என்று ஏற்கனவே திரு. மு.கருணாநிதி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆண்மையும் ஆளுமையும் உள்ள ஆளுநர் தமிழக அரசியலை தூய்மை படுத்த எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.

About Author

Advertisement

Post a Comment

 
Top